Posted by
Kousalya Raj
comments (11)
ஆசையாய் அள்ளி பருகுவேன்
அது தந்த மயக்கத்தில்
வரும் என் உளறல்கள்
உன் செவி சென்று சேருமோ
வழியில் மதிமயங்கி
கிடக்குமோ !
நேசத்தால்
தொட்டில் கட்டி
என்னை
குழந்தையாக்கி
குழந்தையாக்கி
உறங்கவைத்து
நீ விழித்திருக்கிறாய்
இன்னொரு விடியலாய் !
என் சிறுபிள்ளை
பேச்சை
பொறுமையாய்
உள்வாங்கும் உன் முன்
மண்டியிட
தோன்றுகிறதே என் அன்பே.....
விஸ்வரூபமெடுத்து
நிற்கும் உன்முன்
சிறகுகள் வேண்டி காத்திருந்தேன்
பிறிதொரு சந்தர்ப்பத்தில்
நெடுந் தவத்தின் முடிவில்
சிறகுகள் பூட்டிவிட்டாய்
எனக்கான வெளி
கண் முன் விரிய
கண் முன் விரிய
மூடியிருந்த கட்டுகள் உடைத்து
தழுவியிருந்த வாதைகள் உதறி
உற்சாகமாய்
பறக்கத் துடித்தேன்
இருந்தும் இயலவில்லை
விட்டுவிடேன்...
நீ பிடித்து
வைத்திருக்கும்
என் மனதை !
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (17)
பிறந்தாள் ஒரு குட்டி தேவதை
பெருமூச்செறிந்து
பிறவி பயன் அடைந்தாள் தாய் !
கையில் ஏந்திய அக்கணமே
தந்தைக்கு தாயான மகளே...!
மூடிய இமைக்குள்
அலையும் விழிகள்
யார் முகம் காண...
உன் பிஞ்சு விரல் நீவி
பேரின்பம் பெற்றது
பெற்றவளா ?பெற்றவரா ?
யார் முதலில்...?!
இனி உன்னை சுற்றியே சுழலும்
அவர்கள் உலகம்...
இனி உன் சொல் கேட்டு நடக்கும்
அவர்கள் காலம்...
இனி உன் கொஞ்சு மொழியே
அவர்கள் கீதம்...
இனி உன் அழகையே பாடக்கூடும்
அவர்கள் தமிழ்...
அன்னையின் சாயலை
உன்னிடம் தேடியவர் புரிந்திருப்பார்
நிழலாய் வலம் வந்த அன்னை
நிஜமாய் அவர் முன்னே !
தாயவள் நீவளர தருவாள் தாய்பால்
தந்தையவன் நீஉயர ஈவான் தமிழ்பால்
இருபாலும் உண்டு சீருடனே
பேறு பல பெறுவாய் !
வாழிய மகளே !
வாழிய பைந்தமிழாய் !
நேற்று நண்பர் ஜாக்கி சேகர் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.....அந்த குட்டி குழந்தையை வாழ்த்தியே எனது இந்த எளிய கவிதை.....
வாருங்கள் வாழ்த்துவோம் ! மகிழ்ந்து சிரிக்கட்டும் தேவதை !!
Labels:
வாழ்த்துக்கவிதை
Posted by
Kousalya Raj
comments (12)
ஒருவர் மேல் ஒருவருக்கு அன்பு இருப்பதால் தான் இந்த மானுடம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அன்பிற்கு பல அர்த்தங்கள், அதில் ஒன்று காதல். மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குள் இருக்கும் காதல் தினம் புதிதாய் என்னை பூக்கவைத்து பார்த்து ரசித்து கொண்டாடுகிறது...!
சில சமயம்,
ஒரு கவிதையில்
அடைத்துவிட முடிவதில்லை
என் காதலை !
தவிரவும் எந்த ஒரு கவிதையும்
முழுமையாய்
சொன்னதும் இல்லை
என் காதலை !!
வெறும் மாம்சங்கள் மீதான காதல் அல்ல, இரு ஆன்மாவிற்கும் இடையேயான உறவு அல்லவா ?!
பிறர் நம்மை நேசிப்பதில் மட்டும் நேசம் இல்லை
நாமும் நேசிப்பதில் இருக்கிறது.....! அன்பை கொடுக்கவும், எடுக்கவும் எனக்கு இருக்கும் உரிமை பறிபோகாதவரை நான் நேசிப்பேன் என்பது ஒரு விதம், உரிமை இல்லாமல் போனாலும் நேசிப்பேன் இது என் நேசம்.....!
நேசிப்பதற்கும், நேசிக்கபடுவதிற்க்கும் பெரிய தேவைகள், எதிர்பார்ப்புகள் வேண்டியதில்லை, தூய்மையான அன்பு இருந்தால் போதும்.
எனக்கு பிடித்த இசையாய், பாடலாய் எனக்குள்ளே தாலாட்டி என்னை உறங்க வைக்கிறது என் காதல் ......ஒரு தாய் போல் தேற்றுகிறது.....சில நேரம் அழவும் வைக்கும், பின் பிறர் அறியா வண்ணம் வந்து கண்ணீரை துடைத்து விட்டும் செல்லும்...!?
வருடம் ஒன்று கூடினாலும் வயதை குறைக்கிறது என் காதல் !!
வருடம் ஒன்று கூடினாலும் வயதை குறைக்கிறது என் காதல் !!
காதலில் தோல்வி
சாத்தியம் இல்லை
ஒரு முறை
பெற்ற வெற்றிக்கு
தெரியாது
தோல்விக்கு அர்த்தம் !
பறக்க தெரியும்
திசை தெரியாது
இலவம் பஞ்சாம்
என் காதல் !!
எனை ஆளும் திமிரே ! வசந்தத்தை அறிமுகம் செய்தாய் என்றே இருந்தேன் வசந்தமே நீ என்பதை உணராமல்...!
நேசம் என்ற பெயரில் எப்போது விழுந்தாய் என்னுள் !?
சரியாய் அந்நேரம் நான் பிறந்திருப்பேனோ !?
காதலுக்கு புது அர்த்தம் சொல்றோம்...நம் நேசம் காதலின் வரையறைக்குள் அடங்காது எனினும் இதன் எல்லைகளை நாமே வரையறுத்தோம் ....சராசரி காதலின் விதிகளுக்கு முரண் பட்டதாலேயே இது கண்ணிய காதலாக இருக்கிறது !
சராசரி காதலர்கள் அல்ல
காதலும் சராசரி அல்ல
எது சரி
கேள்வி எழவில்லை
எல்லாம் சரி என்கிறது என் காதல் !!
அடங்க மறு அத்து மீறு
என்கிறது கம்யூனிசம் !
அத்து மீறாமல் அடங்கி போ
என்கிறது என் நேசம் !!
தோற்க பிடிக்கிறது
உன்னிடம் மட்டும்
உன் வெற்றி ரசிக்க !
சரணடைய பிடிக்கிறது
சமாதானத்திற்கு அல்ல
மறுபடி
செல்லச்சண்டை போட !
விலகி இருக்க
எண்ணம் வந்த
மறுநொடி
அதிகமாய்
நெருங்குவேன் உன்னை !!
பல கவிதைகளில் நான் அள்ளி இறைத்த காதலை, மௌனமாய் உள் வாங்குவாய் ஒரு ஓரமாய் நின்று, தவறியும் உன் இதழ் உச்சரித்ததில்லை 'நேசிக்கிறேன் உன்னை' என்று !
நான் புரிந்து கொள்வேன், அழுத்தமாய் என் பெயர் சொல்லி அழைக்கும் போது அதை தான் நீ சொல்கிறாய் என்று !!
இரு
தீக்கடைக்கோல்
உரசி
பனி மழை
பொழிகிறது !?
மீண்டும் மற்றொரு கவிதையில் சந்திப்போம்.....
Labels:
கவிதை மாதிரி
,
காதல்
Posted by
Kousalya Raj
comments (20)
புரளுகிற போதெல்லாம்
ஞாபகம் வருகிறது
அழைப்பதாய் சொல்லி
நீ மறந்து போன
நீ மறந்து போன
தொலைபேசி
அழைப்புகள் !
அழைப்புகள் !
உன்னிடம்
பரிமாற
என் சேமிப்பில்
இருந்த சொற்கள்
கரைந்துவிட்டன
மிச்சமாய்
நெடிய மௌனம் !
நெடிய மௌனம் !
மென்று விழுங்கும்
தீக்குருவி நீ
தெரிந்தும்
கனன்று
காத்திருக்கின்றன
கோபக்கனல்கள் !!
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (25)
தவம் கிடக்கிறோம்
நானும் தொலை பேசியும் !
சிணுங்கும்
ஒவ்வொரு முறையும்
உன் குரலை எதிர்பார்த்து
சலித்த மனது !
என்றோ வரும்
அழைப்புக்காய்
ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கிறது
தொலை பேசியும்
தொலைந்த மனதும் !
தொல்லையடா உன்னுடன்
இன்றாவது
பேசித்தொலை தொலைபேசி !!
நலம் விசாரிப்பு
ஊடல்
கோபம்
தவிப்பு
கண்ணீர்
கெஞ்சல்
கொஞ்சல்
கூடல்
சிரிப்பு
அனைத்தும்
நிகழ்ந்துவிடுகிறது
தொலைபேசியில்...
நான் தனித்தில்லை
இவ்வாறு
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன்னுடன் !!
Posted by
Kousalya Raj
comments (21)
பிறர் உன்னை அழைக்கும் போது
இருக்கிறேன் உன் பெயரில் !
பிறருடன் பேசும் போது
இருக்கிறேன் உன் வார்த்தையில் !
பிறரை பார்க்கும் போது
இருக்கிறேன் உன் பார்வையில் !
இல்லை என்று மறுத்துவிடாதே
நொறுங்கிவிடும் உள்ளே ஒன்று !!?
மெல்லிய இழை ஒன்று
அசைந்தும்
அசைவின்றியும்
இருவருக்குமிடையே !
சிறு காற்று போதும்
இழை அறுபட...
அறுபடாமல் பாதுகாப்பதில்
பருவங்கள்
கடந்துவிடுகின்றன
எனக்கு ?!
செத்து கிடக்கிறது !
ஒரு முறை அழை
உயிர் பிழைக்கட்டும்
என் பெயர் !!
ஓடுகிறேன்
துரத்துகிறாய்
நினைவுகளால் !
தேடுகிறேன்
ஓடுகிறாய்
என் உதிரமாய் !
Posted by
Kousalya Raj
comments (20)
மௌனமான மௌனங்கள் !
திரை விலகும் தருணம்
எதிர்பார்த்தே
விழும் மற்றொரு கனத்த திரை !
எதற்கான ஊடல்,
மறந்து புதிதாய் சேர்ந்த
உனது பாரா முகம் !
உனக்கான சொற்கள், தகவல்கள்
எனக்குள்
பிடிவாதமாய் மரிக்கின்றன !
தனிமை உதடுகள் அசைய
வார்த்தைகள் காற்றில்
கேட்பாரற்று!
நீண்ட மௌனம்
நீள் உறக்கத்திற்கான
ஒத்திகை !?
பிரிவு வலிக்கிறதுஒத்திகை !?
மௌனம் இதயம் பிளந்தாலும்
சுகித்து திளைக்கிறது காதல் !
பூமி நனைத்த மழை
ஒரு போதும்
வான் நனைத்ததில்லை !
நீ வான்
வெப்பம், குளுமை உன்னில் !
நான் மண்
தாங்குவேன் என்னில் !
தவிப்பதும்
தடுமாறுவதும்
காத்திருப்பதும்
கலங்குவதும்
காதலுக்கு புதிதா ?!
காலமற்று போய்
திசைகளற்ற பயணத்தில்
செயலற்று பறக்கும்
சிறகுகளற்ற
ஒரு சிறு பறவை !!
படங்கள் - நன்றி கூகுள்
Labels:
கவிதை காதல்













