அன்பே

            

              
               காதல் கவிதை தவிர
               வேறு எழுத தெரியாதா?
               என்கிறார் என்னவர்..!
               மனம் முழுதும் காதலாய் நீ
               வியாபித்திருக்கும் போது
                கவிதையிலும் காதல்தான்
                இருக்கும் என்றேன் திமிராக !


                சங்க  இலக்கியம் தேடி 
                எதுகை, மோனையில்
                எழுதுகிறேன் வெறுப்பில் , 
                சண்டையிடு
                என்னிடம் என்றேன்.
                அது எப்படி? சொல்லிதா
                என்றாய் குறும்புடன்..!  .


                 சட்டென கண்மூடிய நான்
                 மனதிற்குள் வணங்கினேன்
                 உன்னை எனக்களித்த உன்
                 அன்னையை.
                 பின் வார்த்தைகள் அற்ற
                 மௌனமாய் தொடர்ந்தன
                 நம் வாதங்கள்!!

15 comments:

// சட்டென கண்மூடிய நான்
மனதிற்குள் வணங்கினேன்
உன்னை எனக்களித்த உன்
அன்னையை.///

வித்யாசமான கோணம். கவிதை அருமை.

 

சட்டென கண்மூடிய நான்
மனதிற்குள் வணங்கினேன்
உன்னை எனக்களித்த உன்
அன்னையை.

////


நல்ல வரிகள்,
வித்தியாசமான சிந்தனை..

 

கவிதை அருமை.

 

//காதல் கவிதை தவிர
வேறு எழுத தெரியாதா?
என்கிறார் என்னவர்..!
மனம் முழுதும் காதலாய் நீ
வியாபித்திருக்கும் போது
கவிதையிலும் காதல்தான்
இருக்கும் என்றேன் திமிராக !//
:))

 

உன்
அன்னையை//

நல்ல அன்பான கவிதை

 

kavithai nandraa ulaathu kousalya

 

வெறும்பய...

வருகைக்கு நன்றிங்க.

 

asiya omar...

வாங்க தோழி நலம்தானே? வருகைக்கு நன்றி.

 

கோவை குமரன்...

நன்றி குமரன்.

 

சௌந்தர்...

நன்றி தம்பி.

 

திவ்யாம்மா...

வருகைக்கு நன்றி தோழி.

 

அவரது அன்பே கவிதையாய் மனம் முழுக்க நிரம்பியிருக்கும்போது ஏது கவிதை வரிகள் !

 

//மனம் முழுதும் காதலாய் நீ
வியாபித்திருக்கும் போது
கவிதையிலும் காதல்தான்
இருக்கும் என்றேன் திமிராக !//

அட அதானே...........

//சங்க இலக்கியம் தேடி
எதுகை, மோனையில்
எழுதுகிறேன் வெறுப்பில் ,
சண்டையிடு
என்னிடம் என்றேன்.
அது எப்படி? சொல்லிதா
என்றாய் குறும்புடன்..! .//

கடைசி வரிக்கு முந்தைய வரியில் “சொல்லித்தா” என்றிருக்க வேண்டுமோ!?

//சட்டென கண்மூடிய நான்
மனதிற்குள் வணங்கினேன்
உன்னை எனக்களித்த உன்
அன்னையை.//

நல்லா இருக்கு இந்த பணிவு.......

 

சட்டென கண்மூடிய நான்
மனதிற்குள் வணங்கினேன்
உன்னை எனக்களித்த உன்
அன்னையை.///

இப்படி ஒரு மருமகளா?