நேசம்


முன்பு தினமும் 
உனது நேசத்தைப் பெறுவதற்கான
வழிகளைப் பற்றியே
யோசித்துக் கொண்டிருந்தேன்


சிரிப்பால்
அழுகையால்
கோபத்தால் 
இரக்கத்தால்
பைத்தியகாரத்தனத்தால்
பிரியத்தை  பெறுவதற்காக 
தினமும் ஒரு நாடகத்தை
நடத்திக்கொண்டிருந்தேன்...!


ஆனால் எல்லாம் முடிவுக்கு வந்ததும்
நாடகங்கள் அற்ற
சொற்கள் இல்லாத 
ஒரு நேசத்தைக் கொடுக்க 
ஆரம்பித்தேன் !!6 comments:

ரொம்ப நல்லாயிருக்குங்க....

வாழ்த்துக்கள்.

 

//சொற்கள் இல்லாத
ஒரு நேசத்தைக் கொடுக்க
ஆரம்பித்தேன் !!/

உங்கள் நல்ல உள்ளத்துக்கு நீங்கள் வேண்டும் நட்பு கிடைக்கும். இறைவனை வேண்டுகிறேன்

 

சே.குமார்...

நன்றி.

 

கோவை குமரன்...

என்னங்க இது ....இப்படியெல்லாம் கமெண்ட்ஸ் கொடுத்தா எப்படி??!!

anyway, thanks for coming.