உன்னிடமே....!!

  
    பெருமூச்சுடன் என் நெஞ்சம்....!
    உன்னை பிரிந்து வந்த பின்னும்,
    வராமல் உன்னிடமே....!
    நீயோ எதையும்
   அறிந்து கொள்ளாதவனாய் 
   பணியே கதி என்று...!?
   நான் உன்னையே நினைத்து
   ஒன்றும் இல்லாமல் போய்விடுவேன்
   என்றே அஞ்சுகிறேன் நிதமும்..?!
   என் அச்சம் தவிர்க்க நீ
   முயலாதது ஏனோ...?
   என் பொறுமை என்னை
   புறம் தள்ளுகிறதே...,
   மனதில் கொதிக்கும் வெப்பம்
   விரைவில் எரிமலையாய்...!
   அதில் சாம்பலாய் போகும் முன்னே
   கோபம் தணிக்க ஒரு
   பார்வையாவது வீசி விட்டு செல்.


*****************************************************
   10 comments:

புரியாமல் இல்லை. புரிந்து கொண்டே விளையாடுவாராக இருக்கும் ..

வழக்க்கம்போல் கலக்கல் கவிதை. கவிதாயினி கௌசல்யா

 

பெருமூச்சுடன் என் நெஞ்சம்....!
உன்னை பிரிந்து வந்த பின்னும்,
வராமல் உன்னிடமே....!//

ரொம்ப நல்ல மனசு....

நீயோ எதையும்
அறிந்து கொள்ளாதவனாய்
பணியே கதி என்று...!?//
அப்படி என்ன சார் வேலை...

நான் உன்னையே நினைத்து
ஒன்றும் இல்லாமல் போய்விடுவேன்
என்றே அஞ்சுகிறேன் நிதமும்..?!//
பயம் எல்லாம் இருக்கா?


என் பொறுமை என்னை
புறம் தள்ளுகிறதே..//
இன்னும் பொறுமையா இருங்கள்


மனதில் கொதிக்கும் வெப்பம்
விரைவில் எரிமலையாய்...!
அதில் சாம்பலாய் போகும் முன்னே
கோபம் தணிக்க ஒரு
பார்வையாவது வீசி விட்டு செல்.//

ஒழுங்க ஓரு பார்வை பார்த்து விட்டு செல்லுங்கள் இல்லையென்றால் எரிமலை வெடிக்கும் உங்களால் தாங்க முடியாது :)

 

//கவிதாயினி கௌசல்யா//
:))
அட கவிதையும் நல்லா இருக்கு, lk avargal கொடுத்த பட்டமும் நல்லா இருக்கு...

//அதில் சாம்பலாய் போகும் முன்னே
கோபம் தணிக்க ஒரு
பார்வையாவது வீசி விட்டு செல்.//

unga avaraukku- warningaaa??

 

அந்த பார்வையை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்கள்..?

 

கெளசல்யா...

கொஞ்சம் நிதானமய்தான் காத்திருந்து பாருங்களேன்...உங்களின் அச்சம் என்னவோ தேவையற்றதுன்னுதான் நான் நினைக்கிறேன்...

காதலில் காத்திருப்பது சுகம்...!

 

//கவிதாயினி//

ஏதோ எழுதுகிறேன், இந்த வார்த்தை சொல்லும் அளவிற்கு இன்னும் நான் எழுதவில்லை என்றே நினைக்கிறேன்..... :))

 

சௌந்தர்...

தம்பி, ஒரு முடிவில தான் இருப்பது போல் தெரிகிறது ....

//ஒழுங்க ஓரு பார்வை பார்த்து விட்டு செல்லுங்கள் இல்லையென்றால் எரிமலை வெடிக்கும் உங்களால் தாங்க முடியாது //

இந்த மிரட்டலுக்கும் பயப்படலைன்னா எப்படி ....?

ரசிகனின் ரசனைக்கு நன்றி ,

 

கோவை குமரன்...

கவிதை நல்லா இருக்கு என்று சொன்னதுக்கு நன்றி நண்பரே....

 

கே.ஆர்.பி.செந்தில்...

//அந்த பார்வையை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்கள்..?//

வேற என்ன செய்யமுடியும்...?! சந்தோசபட்டுக்க வேண்டியதுதான்....!! :))

( அடடா... நீங்களுமா.... இப்படி கிளம்பிடீங்க.....?!! இப்படி கேள்வி எல்லாம் கேட்டா எனக்கு பதில் சொல்ல தெரியாதே தோழரே...)

:)))

 

dheva...


//காதலில் காத்திருப்பது சுகம்...!//

'அனுபவம் பேசுகிறது' என்பது இதுதானா...?!