மௌனமாய்...!

    

    தேடலின் விடை மற்றொரு     
  முடிவில்லா தேடல்....!! 
  தண்ணீர் பிடிக்க சென்றுவிட்டு 
  வெறும் குடத்துடன் திரும்பி வந்த 
  மனநிலை..!! 
  விளக்கம் பெற்றபின்னும்,
  அடம் பிடிக்கும் குழந்தை மனம்!!
  விளங்க முடியா கவிதையாய் நீ !!
  அனைத்தும் எனதாய் எண்ணி 
  போராடும் மனதை கட்டுபடுத்த 
  அறியா பேதையாய்...?!
  கட்டுபட மறுக்கும் ஆணவம்,
  வென்றே தீருவேன் என்ற 
  பிடிவாதம்....!!
  பக்குவம், என்னிடமும் வரும்வரை
  சற்றே விலகி நிற்கிறேன்,  உன் 
  அனுமதியுடன் மௌனமாய்...!!11 comments:

//பக்குவம், என்னிடமும் வரும்வரை
சற்றே விலகி நிற்கிறேன், உன்
அனுமதியுடன் மௌனமாய்...!///

அருமை

 

Kavithai romba arumai.
vazhththukkal.

 

தண்ணீர் பிடிக்க சென்றுவிட்டு
வெறும் குடத்துடன் திரும்பி வந்த
மனநிலை..///

என்ன ஒரு மனநிலை

 

கட்டுபட மறுக்கும் ஆணவம்,
வென்றே தீருவேன் என்ற
பிடிவாதம்....!!///

நல்ல பிடிவாதம் தொடர்ந்து இதை செய்யுங்கள்

 

மௌனமாய் ரசித்தேன் :)

 

பிடிவாதம் விடுபட்டால் பிடிபடும் அனைத்தும். வாழ்த்துக்கள், நன்றி.

 

சே.குமார்...

nanri. :))

 

சௌந்தர்...

:))

 

Balaji saravana...

ரசனைக்கு நன்றி.

 

adhiran...

//பிடிவாதம் விடுபட்டால் பிடிபடும் அனைத்தும்//

வாங்க மகேந்திரன். வாழ்த்துக்கு நன்றி.