வந்துவிடு.....!!?

     
     தொட்டுவிட அடம் பிடிக்கும்
     மனதை எச்சரிக்கிறேன்
     நெருப்பு வளையத்துக்குள் நீ
     அதீத பாதுகாப்பில்.......!!
     எடுத்து செல்லேன் என 
     அழைப்பு விடுத்தும்
     பேதை புன்னகை பார்த்து
     பேதலித்து போனேன்.......!!
     களவாட எண்ணம் இல்லை 
     வந்துவிடு 
     நீயாக......!!
     இல்லை தந்துவிடு 
     என் காதலை....!! 
     உன் காலடியில் 
     மண்டியிட்டு கிடக்கிறதே !!  
     இல்லை விட்டுவிடு 
     பிழைத்து  போகட்டும் 
     இவள் .....!!
18 comments:

நேத்து அறைவேன் என்று சொன்னிங்க இன்னைக்கு மிரட்டல்

 

//சௌந்தர் சொன்னது…
நேத்து அறைவேன் என்று சொன்னிங்க இன்னைக்கு மிரட்டல்//

ரிப்பீட்டு!

 

உன் காலடியில்
மண்டியிட்டு கிடக்கிறதே !!
இல்லை விட்டுவிடு
பிழைத்து போகட்டும்
இவள் .....!!


எனக்கு புரியவில்லையே .....கடைசி வரிகளின் அர்த்தம் என்ன ...அது தான் கவிதையோ ....

 

இல்லை விட்டுவிடு
பிழைத்து போகட்டும்
இவள் .....!!/////

இது சரியான வரிகள் தானா ? கொஞ்சம் கான்றடிக்சனா இருக்கே

 

களவாய்க் காதலிப்பதும் இனிக்கும் கௌசி !

 

This is my first visit.
unga blog romba nalla kavithaiyoda azahaa irukku.
நேத்து அறைவேன் என்று சொன்னிங்க இன்னைக்கு மிரட்டல் repeat.

www.vijisvegkitchen.blogspot.com

 

உள்ளேன்

 

//களவாட எண்ணம் இல்லை
வந்துவிடு
நீயாக......!!//

நல்லாயிருக்குங்க
வாழ்த்துகள்

 

சௌந்தர் சொன்னது…

//நேத்து அறைவேன் என்று சொன்னிங்க இன்னைக்கு மிரட்டல்//

ம்....என் வழிக்கு கொண்டு வர எப்படியெல்லாம் மிரட்ட வேண்டி இருக்கு பாத்தியா, இதுல உன் கேள்விக்கு வேற பதில் சொல்ல வேண்டி இருக்கு....!!??

:))

 

Balaji saravana சொன்னது…

//சௌந்தர் சொன்னது…
நேத்து அறைவேன் என்று சொன்னிங்க இன்னைக்கு மிரட்டல்//

//ரிப்பீட்டு!//

என் பதிலும் அதுதான்....ரிப்பீட்டு...!

நல்லவேளை பதில் சொல்ற வேலையை எனக்கு நீங்க கொடுக்கல....நன்றி சகோ

:))

 

murugan சொன்னது…

//எனக்கு புரியவில்லையே .....கடைசி வரிகளின் அர்த்தம் என்ன ...அது தான் கவிதையோ ....//

கவிதைனு தானே எழுதினேன்.... .உங்களுக்கு அப்படி தெரியலைனா மறுபடியும் படிங்க....இப்ப புரியும்....ஓ.கே. :)))

வருகைக்கு நன்றிங்க

 

மங்குனி அமைசர் சொன்னது…

//இல்லை விட்டுவிடு
பிழைத்து போகட்டும்
இவள் .....!!//

//இது சரியான வரிகள் தானா ? கொஞ்சம் கான்றடிக்சனா இருக்கே//

உங்களுக்கும் அதே சந்தேகம் தானா?? இப்ப புரியறமாதிரி சொல்றேன்...

"ஒன்னு நீயா மரியாதையா வந்திடு ..... அது முடியாதுனா என் காதலை கொடுத்துடு.....அதும் முடியலைனா என்னை ஆள விடுடா சாமினு அர்த்தம்...."

ஸ்ஸ்....ப்பா.... முடியல அமைச்சரே...கவிதைனு ஒன்ன எழுதறது இருக்கே....??! முதல் முறையா இங்க வந்ததுக்கு நன்றிங்க. :))

 

ஹேமா சொன்னது…

//களவாய்க் காதலிப்பதும் இனிக்கும் கௌசி !//

அது சரிதான்....!!?

நன்றி ஹேமா....!

 

Vijiskitchen சொன்னது…

//This is my first visit.
unga blog romba nalla kavithaiyoda azahaa irukku.
நேத்து அறைவேன் என்று சொன்னிங்க இன்னைக்கு மிரட்டல் repeat.//

வருகைக்கு நன்றி தோழி.

 

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//நல்லாயிருக்குங்க
வாழ்த்துகள்//

வருகைக்கு நன்றி சகோ .

 

Very very nice poem..............

 

Jeyamaran சொன்னது…

//Very very nice poem.....//

thank u