யார் இவள்....?!அடிக்கடி வேஷம் கட்டுகிறேன் !!
அலங்கார அணிவகுப்பு, நான்
ஒருத்தி மட்டுமே நடை பயில
நிறக் குறைவு, மூக்கு பெரிது, 
முன் பல் தூக்கல், உயரம் அதிகம் 
நடை சரியில்லையே.......??!
நிராகரிக்க
காரணங்களுக்கா  பஞ்சம் !!


குறைகளும் நிறையாகும்  ஒரு 
புள்ளியில் - வரதட்சணை !!
துண்டின் மறைவில்  எந்த விரலை 
பிடித்தால் பேரம் படியும் 
குழப்பத்தில் அப்பா....!!?
இரவில்  புலம்புகிறாள் அம்மா
எங்களுக்கு பிறகு இவளுக்கு யார் ஆதரவு ? 
உலகம் அவ்வளவு கொடியதா ??!


அலுவலக மதியவேளையில் 
உணவுடன் என்னையும் மெல்லும்  
சக ஆண்கள், பெண்கள்....!!?
அரைநாள் விடுப்பு எடுக்க   
சந்திக்கும் ஏளன சொற்கள்....!!?
பழகி போனது அவமானம் 
விலகி போனது கூச்சம்
மறந்தே போனது வெட்கம் !?


இரவு -  மற்றவர்களை 
உறங்க வைத்து விட்டு 
என்னை மட்டும் எழுப்புகிறது....!!?
மத்தளம் கொட்ட, 
வரி சங்கம்  நின்றூத
கைத்தலம் பற்ற 
கண்ட  கனாவும்  
வருவதில்லை இன்று......!!?
   
  

10 comments:

நீண்ட நாட்களாக கல்யாணம் ஆகாத பெண்களின் உணர்வுகளை பற்றிய அருமையான கவிதை...

 

ஏதோ ஒரு ஆற்றாமையில் தோன்றிய இயலாமையில் வெளிப்பட்டு இருக்கும் ஒரு முதிர்கன்னியின் உணர்வு....

அப்பட்டமாய் வரிகளில் வந்து விழுந்திருக்கிறது. வார்த்தைகளுக்கு இடையே ஒளிந்திருக்கும் சோகத்தின் உச்சத்தோடு சேர்ந்து கொள்கிறது மனது....

வரிக்கு வரி...உப்புக்கரிக்கிறது கண்ணீர்..!

பொதுவாக கவிதையின் பின்புலத்தில் பரிணாம வளர்ச்சி தெரிகிறது...!

 

//எங்களுக்கு பிறகு இவளுக்கு யார் ஆதரவு ?
உலகம் அவ்வளவு கொடியதா ??!//

nice lines

 

முதிர் கன்னியின் துயரம் வரிகளில்..
சோக மேகம் சூளுகிறது இக்கவிதையில் சகோ.. :(

 

ம்ம் நிறைவடையாத நிறைவுகள்தானே கனவுகள்

நல்ல கவிதை !

 

முதிர் கன்னியின் உணர்வுகள்

 

arumaiyaana kavithai. sudum nijam. nandri, pagirthalukku. :)

 

பழகி போனது அவமானம்
விலகி போனது கூச்சம்
மறந்தே போனது வெட்கம் !?


.....இந்த வரிகளில் இருக்கும் ஆழமான உணர்வுகள்.........அப்பப்பா! திருமணம் தள்ளி போகும் பெண்ணின் மனதை நன்றாக படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்!