சரணடைகிறேன் !!
    சொர்க்கமும் நரகமும் 
    ஒன்றாய்  கண் முன்
    தெரிகிறது 
     உன்னால்...!
    
    உன் புன்னகை உண்டாக்கிய 
    பூகம்ப
    இடிபாடுகளில்  தேடுகிறேன்
    என் இதயம்.....!!

    மாறி மாறி வார்த்தை அம்புகள்
   எய்தும்  சிறிதும்
   உரைக்கவில்லை....
   எறிந்தது  நீ என்பதால்...?!

   பிடித்த  புது மழையில் 
   நனையும் முன் 
   குளித்துவிட்டேன்.... உன்
   வார்த்தை நெருப்பில் !

   தாய் அடித்தும் 
   அவள் மடி தேடும் 
   குழந்தையாய்
   சரணடைகிறேன் உன்னிடம் !!25 comments:

சொர்க்கமும் நரகமும்
ஒன்றாய் கண் முன்
தெரிகிறது
உன்னால்...///

ஒன்னு சொர்க்கம் இருக்கணும் இல்லை நரகம் இருக்கணும் சொல்றிங்களா?

 

உன் புன்னகை உண்டாக்கிய
பூகம்ப
இடிபாடுகளில் தேடுகிறேன்
என் இதயம்.....!///

இனி மேல் சிரிக்காதீங்க

 

// உன் புன்னகை உண்டாக்கிய
பூகம்ப
இடிபாடுகளில் தேடுகிறேன்
என் இதயம்.....!!//

ஒரு கவிதை எப்போது தனது வரிகளை வாசிப்பாளனுக்கு தருவிக்கும் பொழுதுகளின் வாசிப்பாளன் வார்த்தைகளின்றி சிலாகித்துப் போய் சிலையாக வேண்டும்....!

பூகம்ப இடிபாடுகளுக்குள்....இதயத்தை தேடுகிறேன் என்ற இடத்தில் புன்னகை பூகம்பத்தை உண்டாக்கியது என்ற உவமானம்..........சிம்ளி சூப்பர்!

 

தாய் அடித்தும்
அவள் மடி தேடும்
குழந்தையாய்
சரணடைகிறேன் உன்னிடம் !!

தாய் அடிச்சா வலிப்பது இல்லை இருந்தும் நான் அழுவேன் நான் அழுதா தாங்கிடுமா உடனே தாய் அழுவா இப்படி பாட்டா பாடுங்கள்

 

கௌசி...காதலின் அவஸ்தையை ஒவ்வொரு வரிகளுமே சொல்லி குளிக்கிறது மழையில் !

 

மென்மையான கவிதை

நல்லாயிருக்குங்க

 

//மாறி மாறி வார்த்தை அம்புகள்
எய்தும் சிறிதும்
உரைக்கவில்லை....
எறிந்தது நீ என்பதால்...?!//

அப்படியா ???

 

//பிடித்த புது மழையில்
நனையும் முன்
குளித்துவிட்டேன்.... உன்
வார்த்தை நெருப்பில் !//

வார்த்தைகள் அருமை

 

காதல் வலி

அருமை சகோ

வாழ்த்துக்கள்

விஜய்

 

kavithai nalla irukunga kousalya..

- sowmya

 

காதல் இவ்வளவு அவஸ்தை நிறைந்ததா

 

அழகான கவிதையில் மனதில் தங்கி விட்ட வரிகளிவை.

//உன் புன்னகை உண்டாக்கிய
பூகம்ப
இடிபாடுகளில்”

 

சௌந்தர் சொன்னது…

//ஒன்னு சொர்க்கம் இருக்கணும் இல்லை நரகம் இருக்கணும் சொல்றிங்களா?//

ஆமாம்.

//இனி மேல் சிரிக்காதீங்க//

என்னை சிரிக்க வேண்டாம் என்று சொல்றீயா...?

//தாய் அடிச்சா வலிப்பது இல்லை இருந்தும் நான் அழுவேன் நான் அழுதா தாங்கிடுமா உடனே தாய் அழுவா இப்படி பாட்டா பாடுங்க//

நீ சொன்னதே பாட்டு மாதிரி தான் இருக்கிறது...?

கவிதை எழுதிட்டு உன்கிட்ட நான் படுற அவஸ்தை இருக்கே....முடியல தம்பி....!!?

 

dheva சொன்னது…

//ஒரு கவிதை எப்போது தனது வரிகளை வாசிப்பாளனுக்கு தருவிக்கும் பொழுதுகளின் வாசிப்பாளன் வார்த்தைகளின்றி சிலாகித்துப் போய் சிலையாக வேண்டும்....!//

சரி. ஒத்துகிறேன்...நீங்க என்ன ஆனீங்க....??!!

:))

கவிதையின் ரசனைக்கு நன்றி.

 

ஹேமா சொன்னது…

//கௌசி...காதலின் அவஸ்தையை ஒவ்வொரு வரிகளுமே சொல்லி குளிக்கிறது மழையில் //

நீங்க சொல்றதே கவிதையாய் தெரிகிறது ஹேமா. நன்றி.

 

VELU.G சொன்னது…

//மென்மையான கவிதை//

ரசனைக்கு நன்றிங்க .

 

LK சொன்னது…

////மாறி மாறி வார்த்தை அம்புகள்
எய்தும் சிறிதும்
உரைக்கவில்லை....
எறிந்தது நீ என்பதால்...?!//

அப்படியா ???//

அன்பிற்கு முன்னால் சொல்லடி உரைப்பது இல்லைதான்...

:))

 

விஜய் சொன்னது…

//காதல் வலி
அருமை சகோ
வாழ்த்துக்கள்//

உங்களின் வருகைக்கு மகிழ்கிறேன் சகோ.

 

திவ்யாம்மா சொன்னது…

//kavithai nalla irukunga kousalya//

thank u sowmya.

 

தியாவின் பேனா சொன்னது…

//காதல் இவ்வளவு அவஸ்தை நிறைந்ததா//

அவஸ்தையுடன் அபத்தமும் நிறைந்தது தான். ஆனால் என்றும் நம்மை உயிர்பித்து கொண்டிருக்கும் அற்புதமானது காதல். மரண பரியந்தமும் நம்மை தொடரும் உணர்வு....

உங்களை அழைத்து வந்த கவிதைக்கும் உங்களுக்கும் நன்றி சகோ.

 

யாதவன் சொன்னது…

//nice keep it up//

thank u bro.

 

விக்னேஷ்வரி சொன்னது…

//அழகான கவிதையில் மனதில் தங்கி விட்ட வரிகளிவை.//

தங்கிய வரிகளை பத்திரமா பார்த்துகோங்க தோழி.

:))

 

///தாய் அடித்தும்
அவள் மடி தேடும்
குழந்தையாய்
சரணடைகிறேன் உன்னிடம் !!///

வாவ்... சூப்பர் பா. ;-))

 

Ananthi...

///வாவ்... சூப்பர் பா. ///

மல்லிகை இந்த வாசலுக்கு வந்ததுக்கு மகிழ்கிறேன்...