ஏன் வந்தாய்....?!

மனதைப் புரட்டி போட்ட 
வார்த்தை ஜாலங்கள் - கருத்துகளால் 
முரண்பட்டும் பிடித்துப்   
போன வாதங்கள் - உயிரை 
ஆழமாய் ஊடுருவி 
சாகடித்த பேச்சுக்கள் - விளைவு 
தெரிந்தும் என்னை 
இழந்த தருணங்கள் - காதலை 
புதிதாய் எனக்கு 
சொல்லிய  சந்திப்புக்கள் - அன்பிற்கு 
புது இலக்கணம் 
எழுதிய புரிதல்கள் - உன் கர்வத்தை 
அடக்க நான் 
எடுத்த சபதங்கள் - திசை மாறி 
தாக்கி உன்முன் 
மண்டியிட்ட என் கர்வங்கள் - பல 
ஜென்மங்கள்  உனை தொடர 
மேற்கொண்ட வேண்டுதல்கள் - புரிந்தும் 
உன்னிடம் கேட்கிறேன்
            
            'ஏன் வந்தாய் என்னுள்....?!!'

22 comments:

/ 'ஏன் வந்தாய் என்னுள்....?!!'//

அதானே என் வந்தார் அவர் உங்களுக்குள்ள??

 

'ஏன் வந்தாய் என்னுள்....?!!'/////

நல்ல கேள்வி

 

//ஏன் வந்தாய் என்னுள்....?!!'//
கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க.. அப்போ தான எங்களுக்கு உங்க கவிதைகள் கிடைக்கும் :)

 

//உன் கர்வத்தை
அடக்க நான்
எடுத்த சபதங்கள் - திசை மாறி
தாக்கி உன்முன்
மண்டியிட்ட என் கர்வங்கள்//

காதல்ல விட்டுக் கொடுத்தல் ரொம்ப முக்கியம். அதை அழகா சொல்லி இருக்கிங்க...

(பார்டா!! இவங்க கவிதை எல்லாம் எழுதராங்க. நான் பதிவு போட்டு எல்லாரையும் திட்ட மட்டும் தான் செய்வாங்க நினைத்தேன்...)

 

கலகிடிங்க

 

LK...

//அதானே என் வந்தார் அவர் உங்களுக்குள்ள??//

கவிதைக்காக கேட்ட கேள்வியை என்கிட்டே கேட்டா எப்படிங்க..??!!

:)))

 

சௌந்தர்...

ஆமாம் நல்ல கேள்விதான்

 

புதிய மனிதா சொன்னது…

//nice//

உங்க வருகைக்கு நன்றிங்க

 

Balaji saravana சொன்னது…

//கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க.. அப்போ தான எங்களுக்கு உங்க கவிதைகள் கிடைக்கும் :)//

அட இது கூட நல்லா இருக்கே....??!! புரிதலுக்கு நன்றி சகோ.

 

TERROR-PANDIYAN(VAS) சொன்னது...

//காதல்ல விட்டுக் கொடுத்தல் ரொம்ப முக்கியம். அதை அழகா சொல்லி இருக்கிங்க...//

நல்ல வேளை என் கவிதையாவது உங்களை குழப்பாமல் இருக்கிறதே...!!? உங்களின் புரிதலுக்கும் முதல் வருகைக்கும் நன்றி சகோ.

//(பார்டா!! இவங்க கவிதை எல்லாம் எழுதராங்க. நான் பதிவு போட்டு எல்லாரையும் திட்ட மட்டும் தான் செய்வாங்க நினைத்தேன்...)//

எல்லோரையும் நான் திட்டுறேனா....?? என்னை ஏங்க வம்புல மாட்டி விடுறீங்க ??

(ஆமா... நேத்து உங்க பிளாக்கில நடந்ததுக்கு பேர் என்னவாம்...?!!) :))))

 

யாதவன் சொன்னது…

//கலகிடிங்க//

நன்றி சகோ.

 

இதென்ன கேள்வி?

 

@Kousalya

// ஆமா... நேத்து உங்க பிளாக்கில நடந்ததுக்கு பேர் என்னவாம்...?!!) :)))) //

அதுக்கு பேர் ஊர் வம்ப விலைக்கு வாங்கரது சகோ. இதுவரை யார் ரத்தமும் சிந்தல.... :))))

 

கவிதை...ஆழமாகச் சொல்கிறது வலியை...

 

asiya omar சொன்னது…

//இதென்ன கேள்வி?//

விடை சொல்ல முடியாத கேள்வி.....!

:))

 

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//அதுக்கு பேர் ஊர் வம்ப விலைக்கு வாங்கரது சகோ. இதுவரை யார் ரத்தமும் சிந்தல.... :))))//

இப்படி வேற ஒரு சமாளிப்பா .....?! ஓ.கே நடத்துங்க.

 

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

 

denim...

உங்கள் வருகைக்கு நன்றி.

 

இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காது கௌசி.சொல்லவும் மாட்டார்கள்.ஏனென்றால் அவர்களுக்கே தெரிவதில்லை தங்களின் வருகை !