என் காதலே...!

     
     
     அடிக்கடி சோம்பி நிற்கும்
     என் மௌனங்கள் - மௌனத்தில் 
     விளங்காத என் காதல்...
     வார்த்தைகளில்
     எங்ஙனம் விளங்கும்....?!
     விதி வலியதாம் - அதைவிட
     வலியதே உன் அறியாமை !
     என் தவிப்பின் கணம்
     உணராமல் போனதென்ன !?
     புரியாக் காதலை எனக்கு
     அடையாளம் காட்டிவிட்டு
     முடிந்தது வேலை என்றே
     ஒதுங்கி போகிறாய் !
     கற்பனைகள் உடையலாம்
     சோப்பு குமிழியாய்...!
     கனவுகள் கலையலாம்
     மேக கூட்டமாய்....!
     உன் நினைவுகள்
     துருபிடித்துக்  கொண்டதே
     எப்படி கலையும்....??
     எப்படி மறையும் ....??

**************************************************************
        
  நேற்று, இன்று மறந்து
  உருவம், பருவம் கடந்து
  தர்க்கம், வர்க்கம் துறந்து
  கள் குடித்த வண்டாய் 
  தள்ளாடி தள்ளாடி பறந்து 
  கொண்டே இருக்கிறேன்..!!
  சரியா... ? தவறா....?
  சரியான ஒரு தவறா..?!!14 comments:

கவிதை நல்லா இருக்கு....

 

//உன் நினைவுகள்
துருபிடித்துக் கொண்டதே//
ஒரு நினைவில் சுற்றிவரும் வரி :)


//சரியா... ? தவறா....?
சரியான ஒரு தவறா..?!!//
நைட்டு சரியா தூங்கலையா சகோ ;)

 

உன் நினைவுகள்
துருபிடித்துக் கொண்டதே////

அந்த அளவிற்கு பிடித்து கொண்டதா இனி ஒன்றும் செய்ய முடியாது

 

//தள்ளாடி தள்ளாடி பறந்து
கொண்டே இருக்கிறேன்..!//

பார்த்து போங்க

 

// கற்பனைகள் உடையலாம்
சோப்பு குமிழியாய்...!//

super. vaalththukkal.

 

வார்த்தை உபயோகம் சூப்பரா இருக்குங்க.. :-)

 

பிரஷா...

நன்றி தோழி

 

Balaji saravana சொன்னது…

//ஒரு நினைவில் சுற்றிவரும் வரி :)
நைட்டு சரியா தூங்கலையா சகோ ;)//

தூங்கும் போது கனவில் சுற்றி வந்த வரிகள் சகோ.....!

சௌந்தர் சொன்னது…

//அந்த அளவிற்கு பிடித்து கொண்டதா இனி ஒன்றும் செய்ய முடியாது//

:))))

புதிய மனிதா...

நன்றி சகோ.

LK சொன்னது…

//பார்த்து போங்க//

:)))

மதுரை சரவணன் சொன்னது…

//super. vaalththukkal.//

வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி.

Ananthi சொன்னது…

//வார்த்தை உபயோகம் சூப்பரா இருக்குங்க.. :-)//

அப்படியா..! நன்றி தோழி.

 

வரிகளால் பின்றீங்க.

 

// கள் குடித்த வண்டாய்
தள்ளாடி தள்ளாடி பறந்து
கொண்டே இருக்கிறேன்..!!
சரியா... ? தவறா....?
சரியான ஒரு தவறா..?!!//


அழகான கவிதை..

 

asiya omar சொன்னது…

//வரிகளால் பின்றீங்க.//

ம்...நன்றி தோழி.

 

பால் [Paul] சொன்னது…

//அழகான கவிதை..//

உங்களின் முதல் வருகைக்கு நன்றி

 

beautiful!
>>>சரியான ஒரு தவறா..