நீயும் நானும்...!
      உலகம் மறந்து நாம் பேசி 
      கொண்டிருக்கும் நேரங்களுக்கு 
      சாட்சியாய் தூரத்தில் 
      அந்த ஒற்றை நிலா !

      கம்பீரம் உள்ளடக்கிய  கனிவான 
      உன் குரல் கேட்டு கண் சிமிட்டி
      நட்சத்திரங்கள் தங்களுக்குள் 
      சிரித்து கொள்கிறதே !

      மலர்ந்து வெகு நேரமான
      நித்தியமல்லியின் நறுமணம் 
      நாசி துளைத்து நானும் இருக்கிறேன்
      என்று நினைவு படுத்துகிறதே !

      குளிரும் மெதுவாய் தொட்டு  
       உடல் தழுவி மாதம்  மார்கழி
       என்று சிலிர்த்து  குறிப்பால்   
       உணர்த்துகிறதே !

       தோட்டத்து மரத்தில்   
       இரு காதல் பறவைகள்
       ரகசியமாய் பேசும் பேச்சுக்கள் 
       நம்மை பற்றியதாக இருக்குமோ ?!

       இருந்தும் என் கவலை எல்லாம் 
       'வந்தேன் நான்' என சூரியன் 
       குரல் கொடுத்துவிடுமோ    
       என்ற யோசனையில் இருக்கிறது !

       மெதுவாய் நான்  போகட்டுமா என வினா எழுப்ப 
       போகணுமா என்ற வினாவே உன் பதிலாய் வர 
       வெட்கத்துடன் உரையாடல் மீண்டும் 
       இடைவெளி இன்றி தொடருகிறது.....!!    

52 comments:

vada

 

இருந்தும் என் கவலை எல்லாம்
'வந்தேன் நான்' என சூரியன்
குரல் கொடுத்துவிடுமோ
என்ற யோசனையில் இருக்கிறது !
// அருமை ....

 

மெதுவாய் நான் போகட்டுமா என வினா எழுப்ப
போகணுமா என்ற வினாவே உன் பதிலாய் வர
வெட்கத்துடன் உரையாடல் மீண்டும்
இடைவெளி இன்றி தொடருகிறது.....!!///

இது அனைத்து காதலர்களுக்கும் நடக்கும் விஷயம்...காதலி போகவா கேட்டா அவளுக்கு இன்னும் பேசணும் அர்த்தம்

 

//மலர்ந்து வெகு நேரமான
நித்தியமல்லியின் நறுமணம்
நாசி துளைத்து நானும் இருக்கிறேன்
என்று நினைவு படுத்துகிறதே !//

ஜாதி மல்லி ,குண்டு மல்லி ,காட்டு மல்லி ஏன் மதுரை மல்லி வரை கேள்வி பட்டு இருக்கிறேன் அனால் நித்ய மல்லி இன்றைக்கு தான் கேள்வி படுறேன் ..........

 

//குளிரும் மெதுவாய் தொட்டு
உடல் தழுவி மாதம் மார்கழி
என்று சிலிர்த்து குறிப்பால்
உணர்த்துகிறதே !//

கரெக்ட் அ மார்கழி 1 இன்றைக்கு தான் ....அதுக்குள்ளே பதிவு(கவிதா (தை )) வந்திருச்சு பா

 

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

கரெக்ட் அ மார்கழி 1 இன்றைக்கு தான் ....அதுக்குள்ளே பதிவு(கவிதா (தை )) வந்திருச்சு பா///

பாபு யார் அது கவிதா...??

 

//மலர்ந்து வெகு நேரமான
நித்தியமல்லியின் நறுமணம்
நாசி துளைத்து நானும் இருக்கிறேன்
என்று நினைவு படுத்துகிறதே !//

மார்கழியை வரவேற்கும் அற்புதமான கவிதை...

 

//தோட்டத்து மரத்தில்
இரு காதல் பறவைகள்
ரகசியமாய் பேசும் பேச்சுக்கள்
நம்மை பற்றியதாக இருக்குமோ ?//

காதல் பறவைகள் என்றல் என்ன ?எல்லா கிளியா ,காக்கா வ ,புறாவா ,மயிலா .............
இந்த கவிதைல எனக்கு நிறையா டௌட் ........வருதே ஏன் சகோ?

 

இம்சைஅரசன் பாபு.. கூறியது...

காதல் பறவைகள் என்றல் என்ன ?எல்லா கிளியா ,காக்கா வ ,புறாவா ,மயிலா .............
இந்த கவிதைல எனக்கு நிறையா டௌட் ........வருதே ஏன் சகோ?///

அது ஒன்னும் இல்லை கூடிய விரைவில் எங்கே செல்லும் இந்த பாதை... தான் மக்கா

 

தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

http://tamilthirati.corank.com/

 

//மெதுவாய் நான் போகட்டுமா என வினா எழுப்ப
போகணுமா என்ற வினாவே உன் பதிலாய் வர
வெட்கத்துடன் உரையாடல் மீண்டும்
இடைவெளி இன்றி தொடருகிறது//

இது ஜூப்பர்....... இந்த பினிஷிங் டச் நல்ல இருக்கு ,,,,,,,

 

ஒற்றை நிலா ஓர் சாட்சி
மின்னும் நட்சத்திரங்கள் சிரிப்பில்
மல்லியின் மணம் சூழ்ந்த இருப்பு
மார்கழி சிலிர்ப்பில் ரகசியப் பேச்சுக்கள்
காத்திருக்கும் சூரியன் கவனத்தில்
மனமில்லாத வினாவிற்கு
பதிலில்லாத விடையால்
தொடருகிறது காதல் உரையாடல்...

சகோ, ஓர் அழகான காதல் காட்சி விரிகிறது :)

 

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

கரெக்ட் அ மார்கழி 1 இன்றைக்கு தான் ....அதுக்குள்ளே பதிவு(கவிதா (தை )) வந்திருச்சு பா///

பாபு யார் அது கவிதா...??//

அட பாவி .......வீட்டுல சோறு தண்ணி இல்லாம ஆக்குறதுக்கு நீ ஒருத்தன் போதுமப்ப .......என் நண்பன்டா

 

கல்பனா...

அட ஆமாம்...!


தேங்க்ஸ் தோழி.

 

சௌந்தர்...

//காதலி போகவா கேட்டா அவளுக்கு இன்னும் பேசணும் அர்த்தம்//

சௌந்தர் என்ன இப்படி...??

 

இம்சை அரசன் பாபு...

//நித்ய மல்லி இன்றைக்கு தான் கேள்வி படுறேன்//

நிறைய வீடுகளில் பந்தலில் போட்டு இருப்பாங்க ...வருடம் முழுவதும் தினம் பூத்திட்டே இருக்கும், அதுதான் நித்ய மல்லின்னு பேர். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பேர் இருக்கும் என்று நினைக்கிறன்.

 

தொடரட்டும் இனிய உரையாடல்.

 

//மெதுவாய் நான் போகட்டுமா என வினா எழுப்ப
போகணுமா என்ற வினாவே உன் பதிலாய் வர//
'போகணுமா?'-இதுமட்டும்தான் அவன் பேசி இருப்பான்!? :-))

 

மலர்ந்து வெகு நேரமான
நித்தியமல்லியின் நறுமணம்
நாசி துளைத்து நானும் இருக்கிறேன்
என்று நினைவு படுத்துகிறதே !

இயற்கையை காதலுக்குள் இழுத்தது அழகு

 

இம்சை அரசன் பாபு...
@@ சௌந்தர்...

//கரெக்ட் அ மார்கழி 1 இன்றைக்கு தான் ....அதுக்குள்ளே பதிவு(கவிதா (தை )) வந்திருச்சு பா

பாபு யார் அது கவிதா...??//

அட ஆமாம் யார் அந்த கவிதா...??

இந்த பேர் வேற யார் போஸ்ட்லையோ பார்த்த மாதிரி இருக்கே சௌந்தர்...

 

சங்கவி கூறியது...

//மார்கழியை வரவேற்கும் அற்புதமான கவிதை...//

மார்கழி என்றாலே எல்லோருக்குமே மகிழ்ச்சி தான்.. ரசனைக்கு நன்றி சகோ.

 

நல்ல காதல் கவிதை

பேசிக்கிட்டே இருக்கலாம் காசில்லைங்க

 

இம்சைஅரசன் பாபு.. கூறியது...


//காதல் பறவைகள் என்றல் என்ன ?எல்லா கிளியா ,காக்கா வ ,புறாவா ,மயிலா .............
இந்த கவிதைல எனக்கு நிறையா டௌட் ........வருதே ஏன் சகோ//

அடடா நானும் நிறைய விளக்கம் கொடுக்கணும் போல...லவ் பேர்ட்ஸ் தெரியாம யாராவது இருப்பாங்களா...?!1

முடியல சகோ. :))

 

சௌந்தர்...

//அது ஒன்னும் இல்லை கூடிய விரைவில் எங்கே செல்லும் இந்த பாதை... தான் மக்கா//

இது யாரை சொல்ற சௌந்தர்...? டவுட்டு##

 

தமிழ் திரட்டி...

வருகைக்கு நன்றிங்க...

 

இம்சை அரசன் பாபு...

//இது ஜூப்பர்....... இந்த பினிஷிங் டச் நல்ல இருக்கு ,,,,,,,//

ஸ்ஸ்ஸ்ப்பா...இதுவாவது புரிஞ்சதே...! :))

 

குளிரும் மெதுவாய் தொட்டு
உடல் தழுவி மாதம் மார்கழி
என்று சிலிர்த்து குறிப்பால்
உணர்த்துகிறதே !


...wow! very nice.....

 

Balaji saravana கூறியது...

//ஒற்றை நிலா ஓர் சாட்சி
மின்னும் நட்சத்திரங்கள் சிரிப்பில்
மல்லியின் மணம் சூழ்ந்த இருப்பு
மார்கழி சிலிர்ப்பில் ரகசியப் பேச்சுக்கள்
காத்திருக்கும் சூரியன் கவனத்தில்
மனமில்லாத வினாவிற்கு
பதிலில்லாத விடையால்
தொடருகிறது காதல் உரையாடல்...

சகோ, ஓர் அழகான காதல் காட்சி விரிகிறது//

அடடா...!!கவிதைக்கு கவிதை போல ஒரு கமெண்ட்...

ஓவரா லீவ் எடுத்துடீங்க போல...

லேட்டா வந்தாலும் ஓல்ட் போஸ்ட் போய் படித்ததிற்கு நன்றி பாலா

 

இந்திரா கூறியது...

//தொடரட்டும் இனிய உரையாடல்.//

நன்றி தோழி. :))

 

சம காலக்கல்வி பற்றிய எங்கள் பதிவுhttp://bharathbharathi.blogspot.com/2010/12/blog-post_15.html

பார்வையிட உங்களை அன்புடன் அழைக்கிறோம்..

 

விடிய விடிய பேசியும் தீராத வார்த்தைகள்...
காதலின் நீட்சியை அழகாக சொல்கிறது கவிதை.

 

margazhiku etha kavithai..
Kurinji

 

நல்லாயிருக்குங்க கவிதை..

 

காதலின் அன்புப் பேச்சுக்கு
முடிவேது கௌசி !

 

//கம்பீரம் உள்ளடக்கிய கனிவான
உன் குரல் கேட்டு கண் சிமிட்டி
நட்சத்திரங்கள் தங்களுக்குள்
சிரித்து கொள்கிறதே//

உணர்ச்சிகரமான வரிகள்
வாழ்த்துக்கள்

தகவல் உலகம்

 

அற்புதமான கவிதை...

 

// மெதுவாய் நான் போகட்டுமா என வினா எழுப்ப
போகணுமா என்ற வினாவே உன் பதிலாய் வர
வெட்கத்துடன் உரையாடல் மீண்டும்
இடைவெளி இன்றி தொடருகிறது.....!! //

செம ரொமாண்டிக்கான வரிகள்... அசத்தீட்டீங்க...

 

இன்னும் தொடர்கிறதா? :)

கவிதை அருமை சகோ..

 

ஜீ...

//இதுமட்டும்தான் அவன் பேசி இருப்பான்!? :-))//

சரியாய் சொல்லிடீங்க...பிடிங்க பூங்கொத்தை...!! :))

ஆனா இது ஓவர்ங்க..

 

@@யாதவன்...

//இயற்கையை காதலுக்குள் இழுத்தது அழகு//

ரசனைக்கு நன்றி சகோ.

 

@@நண்டு @நொரண்டு...

//ம்//

நல்லா இருக்குனு சொல்றீங்களா நல்லா இல்லைன்னு சொல்றீங்களா...? :))

ம்...ம்...ம்...!

 

@@VELU.G ...

//நல்ல காதல் கவிதை

பேசிக்கிட்டே இருக்கலாம் காசில்லைங்க//

அதனாலதாங்க இப்படி போயிட்டு இருக்கு...?! நன்றி சகோ.

 

@@Chitra ...

ரசனைக்கு நன்றி சித்ரா.

 

@@பாரத்..பாரதி...

//விடிய விடிய பேசியும் தீராத வார்த்தைகள்...
காதலின் நீட்சியை அழகாக சொல்கிறது கவிதை//

அழகான ரசனைக்கும், புரிதலுக்கும் நன்றி...

உங்க வெப்சைட் சென்று பார்த்தேன்.
நன்றி

 

Kurinji ...

மார்கழி வந்ததும் கவிதையும் தொடர்ந்து வரும் போல தோழி. :))

நன்றி

 

@@ஹேமா...

//காதலின் அன்புப் பேச்சுக்கு
முடிவேது கௌசி//

உண்மைதான் ஹேமா...உணர்வுகளின் சங்கமம் இந்த உரையாடல்கள்...!

:))

 

@@பதிவுலகில் பாபு...

உங்களின் ரசனைக்கு நன்றி சகோ.

:)

 

@@டிலீப்...

வருகைக்கும், ரசனைக்கும் மகிழ்கிறேன்.
நன்றி

 

@@T.V.ராதாகிருஷ்ணன்...

வருகைக்கும், உணர்விற்கும் நன்றி சகோ


@@philosophy prabhakaran ...


ரசனைக்கு நன்றி.


@@வினோ...

//இன்னும் தொடர்கிறதா? :)//

ம்ம்...முடிந்துவிட்டது சகோ...

:))


@@பார்வையாளன்...

தொடரும் வருகைக்கு நன்றி.